Pages

Friday, September 7, 2012

31 சிந்தனைகள்

# 01


இருப்பிற்கான காரணம் உணர் ;
உணர்வதற்கு நிறையப் படி ;
படிப்பதற்கு நிறையத் தேடு ;
தேடுவதற்காகவே வாழ் !
# 02
  

கண்ணுக்குத் தெரியாத, ஊனமுற்ற ஊமைவிதியிடம் சண்டையிட்டுத் தோற்றுப் போகிறான்; யார் யாரையோ இகழ்ந்துகொண்டே தான் வாழ மறந்து போகிறான் !

# Exclusively மனிதன் !
#03


சில மனித நரிகளின் கைகளில் சிக்கிப் படாத பாடு படுகிறது - அன்பு !
#04


புலம்பல்கள் என்றேனும் ஒரு பிரச்சினை'யையாவது குறைத்திருக்கிறதா/தீர்த்திருக்கிறதா என்று யோசித்து பாருங்கள். புலம்புகிற நேரத்தில் பிரச்சினைகளின் தீர்விற்கான ஆயிரம் வழிகளில் ஒரு வழியாவது யோசித்து வையுங்கள்.
# 05


அன்பைப் பற்றி அரைமணி நேரம் தொடர்ந்து பேசினால். அன்று தான் நான் நிஜமாகவே வாழ்ந்ததைப் போலிருக்கிறது ! அதனால்த்தான் அன்பைக் கட்டியணைத்து வார்த்தையில் விளையாடி மகிழ்கிறேன்... ஒவ்வொரு இரவும்.

I wish everyone should keep an eye on this , For it will really uplift you to atleast some extent. Go call ur soul mates or some one you love so much, and speak with them, or If you prefer Loneliness over Company with someone , Atleast Embrace yourself and end the day with LOVE !
# 06

எல்லா விஷயத்திலும் அதிர்ஷ்ட்டசாலியாகவே இருப்பதும், ஒரு வகையில் துரதிர்ஷ்ட்டவசமானது தான்.
# Cuz, There's a great possibillity of missing out all the real fun of life, when you always recieve something by the favour of luck!

# 07

   
திருட்டுத்தனமாய்
ரசிக்கப் படுகிறேன்
என அறிந்த
அடுத்த நொடியே
சிவாஜி கமலின்
குழந்தைத்
தனமான நடிப்பை
எல்லாம்
முகத்தில் சேர்த்துக்
கொள்கிறேன் !

பின்னாடி யூஸ் ஆவும் !
 
# 25
 

தனிமையின்
மகத்துவம்
மட்டும்
புரிந்துவிட்டால்
நம்
வெறுப்பின்
சுவடுகள்
அழிந்துபோகும் !

When you learn to master the skill of loneliness and if you could feel the profoundness of it., then You will no more Hate any Single Species/soul/ Thing in the world.
 
# 26
 

பாகனைப் போல
பலர் அடித்துத்
துன்புறுத்தினாலும்
திரும்பத் தாக்காமல்
யானையைப்
போல
என்றென்றும்
அன்புக்குக்
கட்டுப்பட்டே
கிடக்கிறார்கள் சில
மனிதர்கள் !
 
# 27
 

எதிர்பார்க்காத ஒன்று, கிடைத்தாலும் ரசிக்கத் தோன்றுவதில்லை ! எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டாலும் அதை நாம் ரசிக்கத் தவறுவதில்லை !
# 28
 
 
பலர் தங்கள் வாழ்க்கையை கனவு மட்டுமே கண்டுகொண்டு, சமுதாயம் என்ன சொல்லுமோ என்று சதா சமுதாயத்திற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!
# LIVE UR DREAMS I SAY... U R NOT THE ONE THAT BORN 2 DWELL IN THE DREAMS OF UR SOCIETY BUT URS.
 
# 29 
 

'எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இறங்கவும் நின்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே'
- வள்ளலார்
● எல்லா உயிர்களையும் தன் உயிராய்ப் பாவித்து, அவற்றின் துயர் துடைத்து அன்பு செய்யுங்கள் ! காலை வணக்கம் !
 
# 30
 

நேசிப்பதற்கும் நேசிக்கப்படுவதற்கும் மீதமிருப்பது ஒரே உயிர் தான் என்ற நிலை வரும் வரை, நம்மை நேசிப்பவர்களின் அருமை நமக்குப் புரியப் போவதில்லை
 
# 31
 

"காதலே பிடிக்காது" என்று வீண் பிடிவாதம் பிடிக்கும் ஆணையும் யாரோ ஒரு அன்பான பெண் அழகாகக் காதலித்து விடுகிறாள் !
    
 

Tuesday, May 29, 2012

ஒரு பூ பிறக்கிறது


அது ஒரு சித்திரைத் திங்கள் கடைசி வாரம் .அக்னி நட்சத்திர வெய்யில் அழகைத் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது.வழக்கம் போலவே மூன்று மணி முப்பது நிமிடங்களுக்கெல்லாம் எழுந்த நீ , நான்கு மணிக்கெல்லாம் சென்றுவிட்டாய் .உன் கணவனையும் கூட்டிக்கொண்டு.நீங்கள் உங்களுக்காய் வாடகைக்கு வாங்கி வைத்திருக்கும் சொத்து , அந்தப் பத்தடி நீலமோ ஐந்தடி அகலமோ  கூட இல்லாத தேநீர்க்கடையைத் திறக்க.ஆம் நீங்கள் இருவரும் நிற்குமிடம் அளவிற்கு அவ்வளவு பெரிய தேநீர்க்கடையை சேரவஞ்சியின் வரலாறு பார்த்திருக்குமோ என்னவோ சந்தேகம் தான் .

நிற்குமிடத்தை மட்டும் சொந்தமாகக் கொடுத்தால் திண்மை நிறை நல்லோர் என்ன செய்தேனும் உயரத்தை தொட்டுவிடுவார்கள் . அந்த ஆயிரத்தில் இருவராக நீங்கள் இருவரும் இன்று இடம் பிடிப்பீர்கள் என்று உலகம் கண்டிப்பாக நினைத்துப் பார்த்திருக்காது . அன்றைய உங்கள் சுற்றம்  உங்களைப் பழித்திருக்கும் , சிரித்திருக்கும் , ஏளனம் செய்திருக்கும். நீங்களாவது பிழைப்பதாவது என்று ஒரு கூட்டம் உங்களை கண்டிப்பாய் கேலி செய்திருக்கும். இருப்பினும் நீங்கள் யார் ? குணக்குன்றுகளும், 'உழைத்து ஓடாய்த் தெய்வதெ'ன்ற சொல்வழக்கின் மொத்த அர்த்தமும் அல்லவா ! கடை திறந்து  நிமிடங்கள் பத்து இருபதென்று பறக்கிறது  . முதல் நாள் களைப்பே நீங்கியிருக்காத உனக்கோ மறுநாள் பொழுது ஏன்தான் சீக்கிரமாய் விடிந்ததோ . உனக்கு ஓய்வு வேண்டும் என்று இரவின் மீது என் கோபமும் , நீ உழைத்து முன்னேற வேண்டுமென்று சீக்கிரமே விடிந்த காலையும்,  இரண்டுமே என் மனதில் சண்டையிட்டு சமாதானமாகிறது.

பாத்துக்கப்பா... என்று கணவரிடம் சொல்லிவிட்டு அரை மைல் தொலைவிலிருக்கும்  குழாயடிக்குச் சென்று தண்ணீர் சுமந்து வருகிறாய். நீ சுமந்து வருவது தண்ணீர் குடத்தை மட்டுமல்ல தளிர் விடும் பிஞ்சு உயிர் என்னையும் தான் . ஆம் உறக்கமின்றிக் கண்விழித்து ஒருபக்கமாய்ப் படுத்திருந்து , நான் ஆசுவாசமாய் மூச்சுவிட நீ அழுங்காமல் மூச்சுவிட்டு, என் பொருட்டு நீ எத்தனையோ உண்ண மறுத்து , காற்றும் மழையும் வெயிலும் கடந்த காலமெல்லாம், நான் நனையவோ , துடிக்கவோ , வெம்மையில் சுருங்கவோ கூடாதென்று வயிற்றில் குடைபிடித்து,  நான் அழாமலிருக்க நீ சிரித்து , உன் சிரிப்பின் சங்கீதங்களை மட்டும் எனக்கென உள்ளே அனுப்பி வைத்தாய்.. நான் யார் ? உன் மகனல்லவா ? உன் சோகம் புரியாதா ? உன் அன்பு தெரியாதா ? உன் அணைப்பும் ஆர்ப்பரிப்பும் எதுவென்று தெரியாதா எனக்கு  ?

அழுதேன்! ஒருதுளி உயிர்த்துளி, அந்த ஒப்பற்ற அன்பாலான வெண்ணிற மழைத்துளியாய் உன் கர்ப்பப்பைக்குள் விழுந்த போதே அழுதேன். . எவ்வளவோ லட்சியங்களை கனவுகளை சுமந்துகொண்டும் ஒரு காலத்தில் எட்டு பைசா பத்து பைசா சம்பளம் வாங்கின அப்பனும் ஆத்தாளும் டவுனுக்குப் பிழைக்க வந்து அக்கம் பக்கம் இருப்போரின் அன்பைப் பெற்றீர்கள் . நீங்களும் அன்பு வளர்த்து என்னையும் பிரசவித்து வளர்த்து வாலிபம் செய்ய எத்தனை சிரமப் படப் போகிறீர்களோ என்று அழுதேன்.

சிரித்தேன், மகிழ்ந்தேன், மறுநொடி நினைத்தேன் இப்படி, ஐம்பது ரூபாய் சம்பாத்தியத்திற்கு வழியில்லாத நேரத்திலும் , வயிற்றில் நான் முண்டியடித்துக் கத்திய போதும் வெளியில் விடச் சொல்லி உன் வயிற்றை நான் எட்டி உதைத்தபோதும் , எவ்வளவு அழகாய் பார்த்தது சிரித்துக் கொண்டும் , தாங்கிக் கொண்டும் , தடவிக் கொருத்தும் இருந்தாய். அதை பார்த்து சிரித்தேன். "அம்மா" என கத்தி அழவேண்டும் போல இருந்தது ,இன்னும் எத்தனை நாட்கள் நான் உள்ளேயே இருக்கட்டும் ? என்னை நீ ஒரு ஜென்மம் முழுதும் கூட வயிற்றிலேயே சுமந்து கொண்டிருப்பாய் , ஆனால் எனக்கோ பத்து மாதத்திற்கு மேல் உன்னை சிரமப்படுத்த எண்ணம் ஏதும் இல்லை.உயிர்க்கதவுகளில் உதைத்தேன்.எட்டி என் அன்பையெல்லாம் சேர்த்திக் கொண்டு பிஞ்சுக் கால்களால் அப்படி உதைத்தேன்.வெளியில் விட்டுவிடு . என்னைச் சுமந்த வயிற்றில் நடத்திய சுற்றுப்பயணம் போதும் . என்னைத் தாங்கப் போகும் கைகள் எவை ? என்னை முத்தமிடப் போகும் கைகள் எவை ? என்னைப் பார்த்து ரசிக்கப் போகிற கண்கள் எவை ? என்னைத் தடவிப் பார்க்கும் கைகள் எவை என்று பார்க்க ஆசை. அதுதான் வெள்ளிக்கிழமை என்று கூட பார்க்காமல் என் உயிரின் பிறப்பிடத்தை எட்டி உதைத்தேன்.

நீ தண்ணீர் சுமந்து வந்த விஷயம் தெரியாமல் போய்விட்டது எனக்கு .நீ தூங்கிக் கொண்டிருப்பாய் என்றல்லவா நினைத்து உதைத்தேன். என்னவோ... நான் நினைத்துக் கூட பார்க்க முடியாத வலியை கொடுத்துவிட்ட சோகத்தில் எப்படியேனும் உன் உயிர்க்கதவுகளுக்குள் புகுந்து வெளியில் வந்து விட நினைத்தேன்.அத்தனை வலியிலும் இடுப்பில் சுமந்து வந்த தண்ணீர் கொஞ்சமும் சிந்தவில்லை. அன்பு சுமந்த மனிதர்களையும் , அன்பு கலந்து நீ செய்கிற எந்த வேலையையும், சிதறாமல் தாங்கிப் பிடிப்பதில் உனக்கு நிகர் நீயே . 

"வலி உயிர்போகிறது " என்று உன் கணவரைக் கூட்டிக் கொண்டு விரைந்து நடந்தாய்.அப்போதெல்லாம் ஆட்டோவா , பஸ்ஸா , காரா ? சைக்கிள் கூட இல்லாமல் அருகிலிருக்கும் நிர்மலா மகப்பேறு மருத்துவமனைக்கு நடந்தே சென்றிருக்கிறீர்கள் இருவரும்  . மருத்துவமனை கடிகாரம்  மணி 5 .30 :  என்று அறைகூவல் விடுக்கிற நேரம் . அன்று தான் ஊரின் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலின் பூச்சொரிதல் விழாவும் கூட . சித்திரை மாதம் கடைசி வெள்ளி . அப்பாடா., என் காத்திருப்புகள் முடிந்துவிட்டது .

எங்கே உன் உயிரைத் தொலைத்துவிடப் போகிறேனோ என்கிற வலி எனக்கு. எங்கே உள்ளிருக்கும் என்னைத் தொலைத்து விடப் போகிறேனோ என்கிற வலி உனக்கு . இருவருமே துடித்தோம்.என் உயிரே.என் உயிரின் உயிரே.நீ யாரென்று பார்த்து மகிழ , அழுது மகிழ , சிரித்து மகிழ வேறு வழியும் தெரியவில்லை எனக்கு.வந்துவிட்டேன்.வந்தேவிட்டேன்.,பேரிடியாய் வானக் கதவுகளை திறந்துகொண்டு குருதி மழைபொழிய உலகத்தின் வெளிச்சத்தில் வந்து விழுந்தேன்.சந்தோஷப் பெருமூச்சு,உனக்கும் சரி எனக்கும் சரி .ஒப்பில்லா உயிர்மூச்சு .எனைப் பார்க்க ஏங்கிக் கிடந்தவள் கிறங்கிக் கிடந்தாலும் கொஞ்சமாய் விழித்துப் பார்க்கிறாய் .உன்னைப் பார்க்க ஓடோடி வந்தவன் உன்னை இவ்வளவு பாடு படுத்தி இருக்கிறேனே என்று நினைத்தால் மேலும் அழத் தோன்றியது .அழுதேன்.அன்றிலிருந்து இன்றுவரை உனக்குக் கொடுத்த மரணவலி என்று என் நினைவை முட்டினாலும் அழுவேன். 

நீயும் உன் கணவனும் ஏன் இத்தனை வைராக்கியத்தை சுமந்தவர்களாக இருந்தீர்கள்?  உன் பெயரை எழுதக் கூடத் தெரியாத நீயும், தன் பெயரை எழுதவும் படிக்கவும் தெரிந்துகொண்ட அப்பாவும் அண்ணனைப் போலவே என்னையும் ஆங்கிலப் பள்ளியில் படிக்க வைத்தீர்கள் .இன்று நானும் சரி, அண்ணனும் சரி பொறியாளர்கள்.பத்து பைசா சம்பளம் வாங்கியவர் நீங்கள்.உங்களால் எங்களைப் பத்து பட்டப் படிப்புக் கூட படிக்க வைக்க முடியுமென்று நம்பினீர்கள்.நடந்தது.இன்று அதே நம்பிக்கையும் , சகமக்களிடம் பேரன்பும் , பசித்த மானுடத்திற்கு அன்பால் அன்னமிட்டு பசியாற்றும் பண்பும் .இல்லாத ஏழைகளுக்கு என்னால் ஆன  உதவி  எதுவாயினும் செய்யவும் எத்தனையோ பண்புகளைக் கற்றுக் கொண்டேன்.

அன்று பார்த்த அதே அம்மா, இன்றும் காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து மோர் கடைந்துகொண்டு . ஐந்து மணிக்கெல்லாம் கடைக்குப் போகிறாய். அப்பாவும் நீயும் தேநீர்க்கடையே உங்கள் திருப்பதியாகத் தினமும் அங்கேயே உழைத்துக் கிடக்கிறீர்கள். இடத்தையும்,அதன் அளவையும் , மாற்றிக் கொண்டீர்கள் .உங்கள் தொழிலையோ குணத்தையோ அன்பையோ எதையுமே நீங்கள் மாற்றிக் கொள்ளவில்லை .நான் இன்றும் என்னால் இயன்ற அளவிற்கு மேல் உங்களை ஏதாவது ஒரு வழியில் இம்சித்துக் கொண்டுதான் இருக்கிறேன் , குணமும் கோபமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற எல்லா குறும்புக் குழந்தைகளையும் போல. ஆனாலும் அதற்குமேல் அளவற்ற அன்பையும் நேசத்தையும் உங்கள் மீது சுமந்துகொண்டுதான் இருக்கிறேன்.

உங்கள் இருவர் மீதும் என் பெருமை இதுதான். உலகத்தில் வேறு எந்தத் தாய்க்குப் மகனாகப் பிறந்திருந்தாலும் இத்தனை அன்புடன் நான் இருந்திருக்க மாட்டேன்.இவ்வளவு மகிழ்ந்திருக்க மாட்டேன்.உலகத்தில் வேறு எந்தத் தந்தைக்கு மகனாகப் பிறந்திருந்தாலும் இவ்வளவு கற்றிருக்க மாட்டேன். இவ்வளவு நேசித்திருக்கமாட்டேன் வாழ்க்கையின் உண்மைகளையும் எதார்த்தங்களையும். இப்படி கதை எழுத நினைத்திருக்க மாட்டேன்.இது மட்டும் சத்தியமான உண்மை .என் வரும் நாட்கள் எப்படி இருக்கப் போகின்றதோ அது இறைவன் இருந்தால் அவர் விட்ட வழி.இல்லையேல் இயற்கை விட்ட வழி.ஆனாலும் என்ன ?

சிறகடித்துப் பறக்கும் பறவைகளாகவோ , கண்ணுக்குத் தெரிந்த பூச்சியாகவோ , நிழல் தரும் மரமாகவோ , நீண்ட நெடும் பாறையாகவோ , மனிதனை சுமக்கும் மண்ணாகவோ , புன்னகை மின்னிடும் பூக்களாகவோ , மிருகமாகவோ , யாராக எதுவாக எப்படிப் பிறந்தாலும் சரி. கடவுளிடம் கெஞ்சிக் கூத்தாடி மாற்று வரம் பெற்று அடுத்த ஜென்மத்திலும் இந்தத்  தாய்க்கும் இதே தந்தைக்கும் ,என்னைத் தன் உயிராகவே  நினைக்கும் என் உயிரினும் மேலான  அண்ணனுக்குத் தம்பியாகவும் இந்த அழகான குடும்பத்திலேயே இப்படியே பிறக்க ஆசைப்படுகிறேன்.என் ஆசை நியாயமென்றால் கடவுள் இருப்பது உண்மை .இல்லை பேரசை என்றால் எல்லா கடவுள்களும் சத்தியமாகப் பொய் !! நிஜத்திலும் நிஜமான அன்பு கேட்டுக் கிடைக்காத ஒன்று உலகத்தில் இருந்து என்ன பயன் ? நியாயமான வரங்களைக் கேட்கும் என் அன்பிற்குக் வரம் தராவிட்டால் கடவுள் என்று ஒருவர் இருந்து என்ன பயன்....

Tuesday, January 17, 2012

Some sensible Facebook Statusses

# 01

ஒரு ஆணை ஒரு பெண் ,வார்த்தைகளில் தாக்கிப் பேசும் போது பல ஆண்கள் கூட சேர்ந்து கொள்கின்றனர் ! ஆக, பெண்ணின் வாதத்திற்கு வலிமையும் சேர்ந்து விடுகிறது ; ஆணின் உண்மை அறியாத போதையில் இருக்கும் பெண்ணாசையும் புரிந்து போகிறது ! Dont ever endorse anyone's views or words unless you see it and hear it by your own ! Don't ever Dwell in other's Thoughts.Think by your own and put your converse then. # Applicable to both the genders!

#02
அனுபவப்பூர்வமான ஆத்மிக ஞானம் தன்னை ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்ளாது ! ஒருவன் எப்பொழுது ஒரு விஷயத்தை முழுமையாகத் அறிந்து கொள்கிறானோ அப்பொழுதே அவனுடைய "நான்" மறைந்து விடுகிறது ! # OSHO (வானம் பூச்சொரிந்து ஆசிர்வதிக்கப் பட்ட மனிதன்)

#03

நிறைய பேர் கால் வைக்காததாலோ என்னவோ , வாழ்க்கைக் குளத்தில், அன்பு - இன்னும் கலங்காத நீராகவே அத்தனை தெளிவாக இருக்கிறது !

# 04

"அப்றம்" என்கிற வார்த்தையும் ," வேற " என்கிற வார்த்தையும் மட்டும் தான் இப்போதைக்கு தமிழில் எனக்குப் பிடிக்காத இரண்டு வார்த்தைகள் ! # தமிழ் டீச்சர்ட்ட சொல்லி மொதல்ல இந்த ரெண்டையும் டெலிட் பண்ண சொல்லணும் ! :)

#05

உள்ளே வெறுத்தும் வெளியே புகழ்ந்தும் பேசும் நண்பனை விட....முகத்துக்கு நேராகத் திட்டும் விரோதி மிகவும் நல்லவன்.....

#06

இவளோ நாளா காப்பி குடிச்சுட்டு இருந்த பைப்பு வெச்ச டம்ளர காணம் ! ஹ்ம்ம் ஹ்ம்ம் ... மம்ம்ம்மீய்....!!! :( 
# ஏன் கடவுள் எனக்கு மட்டும் இவளவு சோதனைய குடுக்குறாரு ?? BAd man !

#07

ஒரு புறம் மதுக்கடலில் முத்தெடுத்துக் கொண்டிருக்கிறான் நம் இளைஞன் ! மறுபுறம் அறிவுத் திரட்டிற்கு ஆணவச் சாயமிட்டு மங்கிக் கொண்டிருக்கிறான் அவன் ! மீதமிருக்கும் சில இளைஞர்களின் சிந்தனைகள் மேலிருக்கும் இரண்டு தரப்பினரின் போதைக்கு ஊறுகாயாகத் தான் போய் சேருகிறது ! விவேகானந்தரும் ,பெரியாரும் , காமராசரும் , அண்ணாவும் வேறு சொல்லாமல் கொள்ளாமல் போய் சேர்ந்துவிட்டனர் ! தன்னிலை புரியாத போதையில் மிதக்கும் இளைஞனை இனி யார் தான் மீட்டெடுப்பது ?

#08

" நீயெல்லாம் எங்க உருப்பட போற " என்கிற அமுத வார்த்தைகள் நம் ஆசிரியரிடமிருந்தும் பெற்றோரிடமும் இருந்தும் வரும் போது மட்டும், அர்த்தம் குறைந்தும் அன்பு நிறைதும் வருகிறது ! 
# ஆனா அங்க தான நமக்கு பைத்தியம் பிடிச்சு போய் கோவம் செமையா வருது ! நம்மள நாம நெறைய மாத்திக்கணும் மை லாட் !

#09

இப்போது என் வாழ்காலச் சமூகத்தில் , மேலான எதுவும் பாராட்டப் படுவதில்லை என்பதை நான் புரிந்து வைத்திருக்கிறேன் ! மன்மத எழுத்துக்களுக்கு மாலை சூட்டும் இந்த புதுயுகத்தில் மனித நேய எழுத்துக்களுக்கு மரியாதை இல்லை ! # மதிப்பிற்குரிய அண்ணன் தமிழருவி மணியன் எழுதிய "அடிமனத்தின் சுவடுகள்" நூலிலிருந்து ! ( உள்ளபடியே வழி மொழிகிறேன் ) I endorse it !

#10
World's cutest Love, sometimes end without even starting ! Save urs by candidly proposing to your loved ones ! Go for it ♥
உங்கள் மனதில் பிறருக்காக இருக்கும் அன்பினை மனம் திறந்து தெரியப்படுத்துங்கள் ! நம் அன்பும்,காதலும்,மனிதநேயமும் நம் உடல் மண்ணுக்கு போவதற்குள் பிறர் மனதிற்குள் புதைக்கப்பட வேண்டும் என்பதை மனதிற் கொள்ளுங்கள் ! - Prabha # From Pearls of platonic love

#11

உலகத்தின் மிக உன்னதமான காதல் , ஓரிரு நொடிகளிலே கூட நடந்துவிடக் கூடும் ! உங்களை இன்னொருவர்க்கும் இன்னொருவரை உங்களுக்கும் மட்டும் உணரத் தெரிந்திருந்தால் ! Thats why i always believe Love could happen in first sight itself ! ♥ 
# Anaadhaikathalan

#12

தன்னை சுற்றி இருக்கும் உலகமும் மக்களும் சிரித்துக் கொண்டே இருப்பதற்கு தங்களது சுயமரியாதைக் கூட விட்டுக் கொடுத்து அசிங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் சில மனிதர்கள் ! சுயமரியாதையை விட எனக்கும் பிற மனதின் மகிழ்ச்சி தான் பெரிதாகத் தெரிகிறது ! # என்னத்த கொண்டு போக போறோம் .... இருக்கிற வரைக்கும் நம்ம மக்களை சந்தோஷம் வெச்சுகுவமே ...

#13

உங்களது நல்ல சொற்களும் செயல்களும் உங்கள் முன் சென்று கொண்டிருப்பவர்களுக்கும் , உங்களோடு நடந்து கொண்டிருப்பவர்களுக்கும் வேண்டுமானால் தூற்றுப் பொருளாக இருக்கலாம் ! ஆனால் , அது உங்கள் பின்னால் வரப் போகிறவர்களுக்குப் பொக்கிஷமாகக் கூடும் ! அடுத்த தலை முறையினர்களின் நலனுக்காக உங்கள் சிந்தனை இருக்கட்டும் ! # May be the existing generation , and the former generation could find fault with the verity behind your words , but the fourth-coming youth culture would surely feel the kernel of your genuine thoughts and could follow you back ! Think & act for the betterment of future youths ! Prabha

#14
நல்ல மாற்றங்களை காண நினைக்கிறவர்க்கும் நல்ல விஷயங்களை கேட்டும் பார்த்தும் பட்டும் வாழ நினைக்கிறவர்க்கும் ஒவ்வொரு நாளும் புது வருடம் தான் !நமக்குள் நல்ல மாற்றம் நாளையில் இருந்தாவது தொடங்கட்டும் ... என்னை தங்கள் வாழ்வின் இனிய நண்பனாக எற்றுக்கொண்டோர்க்கும் , என்னை விரும்பியும்,வெறுத்தும், ஒவ்வொரு விதத்தில் செதுக்கும் உங்கள் அனைவரது அன்பிற்கும் நெஞ்சார்ந்த நன்றி ! HAppy New year 2012 to all my FB friends and college friendZ !

#15

புத்தாண்டிற்கு உற்சாக பானத்தில் குளிக்கப் போகிற நண்பர்களே... ஏதோ இப்ப அதுல புதுசா போதி தர்மர் படம் போட்டது வந்திருகாம்ல ... மோதி பாத்துட்டு மறக்காம எப்டின்னு சொல்லுங்க ! # New year update !

#16

♥ makes Life Beautiful !
What is true love ? i asked a lil guy , This is how he managed to reply , Love is when a puppy LICKS ur face , i laughed ., but then he added .... EVEN AFTER YOU LEFT HIM ALONE ALL THE DAY ! ♥ Love makes life beautiful !

#17
Among the class of gurlz who loves Raindrops , Puppies , chocolates , singing birds like myna's., U stand out distinctly by Loving Mankind and their nature ! For me , You are the everything as you are more virtuous and clear than raindrops , more sweeter than chocolates in nature , more hypnotizing voice possessor than myna's and singing birds !

#18

எதிர்வீட்டுக்காரன் கட்டியவீட்டில் 
எங்களுக்கு அப்படி ஒரு வரம் !
தெருவில் கொட்டிக் கிடக்கும் மணலில் வெள்ளிக்கிழமைகளில் கட்டப் படும் கோவில்களும் , அமைக்கப்படும் குகை வழிகளும் , 
வழிகள் சங்கமிக்கிற சந்திப்பில் மணற்சூட்டை தனிக்கிரதாய் ஏற்றப்படும் சூடங்களும் ! 
ஏழு எட்டு வயதில் உணர்ந்த சாமியை இப்போதும் உணர முடிகிறது ! கடவுள் இருக்கிறார்.... குழந்தையாய் வாழும் அத்தனை நெஞ்சிலும் !.... # சின்ன வயசு ஞாபகம் ! —


#19

When i win your shyness , You appear to hold me tight and chill out my ignited desires ! ♥
உன் வெட்கங்களை நான் வெல்லும் போது என் கள்ளத்தனமான வேட்க்கைகளில் கொஞ்சம் கொஞ்சமாய் அனல் தணிக்கிறாய் ! ♥ When i win your shyness , You appear to hold me tight and chill out my Ignited desires !

#20

அன்பிற்கு அழகு சேர்க்கும் நானும் ! அழகிற்கு அன்பு சேர்க்கும் நீயும் ! வாழ்க்கைக்கும் காதலுக்கும் எத்தனை அழகான அர்த்தம் சேர்க்கிறோம் அழகி ! ♥


#21

நம் வாதங்களும் விவாதங்களும் எத்தனையோ சக்திகளைக் கொண்டது ... நம் வாதங்கள் பிடித்துப் போகிறவர்கள் நல்ல நண்பர்களாகிறார்கள் .... வெறுத்துப் போகிறவர்கள் நல்ல விளம்பரதாரர்கள் ஆகிறார்கள் ! # Let your words sounds high , for it will fetch you greater Experience and make you know the real nature of people around you !


#22
எல்லாவற்றிலும் நமக்கென்று சொந்தமாக ஒரு அபிப்ராயம் இருப்பதன் ஒரே பேராபத்து என்னவென்றால் அதை எங்காவது சொல்லநேர்ந்து விடுகிறது என்பதுதான். மற்றபடி எவ்வளவு பேர் நிம்மதியாக இருக்கிறார்கள் இந்த உலகில்.. _ MPuthran

#23

மதம் இல்லாவிட்டால் கூட நல்லவர்கள் நல்லதை செய்து கொண்டிருப்பார்கள். கெட்டவர்கள் கெட்டதை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் இன்று மதத்தின் பேரில் நல்லவர்கள் கூட கெட்டதை செய்கிறார்கள். Steven weinberg

#24

After the game the KING and PAWN 
go into the same box ~ ஆட்டம் முடிந்த பின்பு அனைவரும் சரிசமமே ! 

#25

U r said 2 b perfectly matured when,
"A person hurts you and you try to understand their situation and dont hurt them back...!"

#26

A good friend who points out mistakes & imperfections & rebukes evil is to be respected as if he reveals a secret of hidden treasure !

#27

Some people feel happy by annoying me with their words ; to them i say, c'mon keep going buddy ! Your words drives and inspires me to sign in at great heights!

#28

ஆண்கள் சுயநலவாதிகளா ? பெண்கள் சுயநலவாதிகளா ? என்பன போன்ற கேள்விகளுக்கு ...ஆண்களுக்குப் பெண்களும் , பெண்களுக்கு ஆண்களும் என்று ஏதேனும்ஒரு பதிலை சொல்லிக்கொண்டு இருக்கிற நிமிஷங்களை அன்பிற்காக செலவிடுங்கள் ! # Invest ur precious time in love than hatred and Egotism !

#29

When a favor is shown to a white man, he feels it in his head and the tongue speaks out; when a kindness is shown to an Indian, he feels it in his heart and the heart has no tongue!

#30

When problem occurs you become the captain of the problem, defeat the problem and succeed!

#31

மனிதனை மனிதன் மாய்த்து உண்ணும் நாள் தொலைவில் இல்லை ! # நாடுகளுக்கிடையில் இருந்த சண்டை , இப்பொழுது மாநிலங்களுக்கிடையில் , மாநிலங்களுக்கிடையில் இருந்த சண்டை இன்னும் சிறிது நாட்களில் மாவட்டகளுக்கிடையில் , மாவட்டங்களுக்கிடையில் எனத் தொடங்கி... ஊர், கிராமம் , குக்கிராமம் , தெருக்கள் ,வீடுகள் போன்றவற்றுக்குள் சண்டைகள் வரும் போலத் தான் தெரிகிறது.... அன்பு தொலைந்து சுயநலம் மேலோங்கும் நாள் விரைவில் வரப் போகிறது என்கிற பட்சத்தில் .... கண்டிப்பாய் உலகம் அழிந்து விடும் .... இன்னும் கொஞ்ச நாட்களிலேயே

#32

உன்னைப் போல் ஒருத்தியை/ஒருவனை வேண்டாம் என்று சொல்ல அவனுக்கு/அவளுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ ?! # இப்படித்தான் ஆரம்பிக்கிறது இன்றைய நாட்களில் வெற்றிபெறும் 90 % காதல் ! # Whatever it may be , Everything in this world is a form of love! The one who get it will feel its essence of trueness ! ♥

#33

கனவில் கூடப் பார்த்திராத கடவுளை கண்மூடித்தனமாக நம்புபவர்கள்., கண்ணுக்கு முன் நிற்கும் நல்ல மனிதர்களை நம்ப மறுக்கும் போது கடவுளுக்கே பிடிக்காத பிறவிகளாகிப் போகிறார்கள் # The profound TRUST which you place on your people can ultimately enhance the RICHNESS of their character Despite however and whatever they are before !

#34

ஒருவன் தனக்குத் தானே எழுதிக்கொள்ளும் நல்ல அறிவுரைகள் ஆயிரம் கீதைகளுக்கு சமமான வலிமை படித்தவை ! # Follow your own heart and words ! Have a nice day ppl !!

#35

என் சிறுபிள்ளைத் தனங்கள் அத்தனையும் என்னைத் தவறான வழியில் கொண்டு செல்லும் போது சுகம் கண்ணை மறைக்கிறது ! அவமானங்களையோ எதிர்ப்புகளையோ தாங்கிக் கொண்டு திரும்பி வருகையில் பயத்தை விட பக்குவம் நெஞ்சை நிறைக்கிறது ! # Life is a road of thorns and roses , Those who are destined to cross 1000 thorns would surely reach million miles smoothly ! feel it ! live it !

#36

நான் மட்டுமே "உலகத்தின் தலைசிறந்த காதலன்" என்ற என் திமிர்த்தனமான இனிய தலைகனத்தை தூக்கி எரிந்து ஓடிப் போய் பிடித்து வைத்துக் கொள்கிறது உன் அன்பு ! # சரியான போக்கிரிடி நீ...♥

#37

வாழ்கை - ஒரு கேடுகெட்ட விளையாட்டு !! அதன் கிறுக்குத் தனமான விதிகளில் மயங்கி சலித்துக் கொண்டு அழுபவனின் பெயர் ~ மனிதன் ! சிரித்துக் கொண்டே ரசிப்பவனின் பெயர் ~ வீரன் !! 
# நா வீறேய்ன் ... நீ மனுசனா ??

#38

தௌசண் டாலர் கொஸ்டீன் : அது ஏண்டா ., உண்மையான அன்ப " அழகான " புள்ளைங்கள்'ட்டயே தேடரிங்க?? - By " நல்லவன் "